தற்போது நாடு முழுவதும் நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என கொவிட்19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத்தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிதொடக்கம் இரவு 11 .00 மணிவரையும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.