மிக விரைவில் 8000 டிப்ளோமாதாரிகள் ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதற்கமைய விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா முடித்த எட்டாயிரம் டிப்ளோமாதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்பொழுது நாடுபூராகவும் வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளதுடன் மேலும் விஞ்ஞானம், கணிதம் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு கூடுதலான பாடசாலைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
