பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10500 ஆல் அதிகரிக்கப்படவுள்ளதுடன், இதற்காக பல்கலைக்கழக கட்டமைப்பில் புதிதாக 500 விரிவுரையாளர்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு இந்த வருடம் இணைத்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10579 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது . இதற்கமைவாக 40000இற்கு மேற்பட்டவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளார்கள். இதற்காக உப வேந்தர்கள் மற்றும் திறைசேரியின் பங்களிப்புக் கிடைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.