Surprising news with Update

Teaching Application

Sunday, February 28, 2021

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மற்றும் ஊழியர்களுக்கு விசேட பஸ் சேவை



நாளை (2021.03.01) ஆரம்பமாகவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பஸ் சேவையை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் கிஞ்சிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.


மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதன் காரணமாகவே பரீட்சை நேர அட்டவணைகளுக்கு அமைவாக விசேட பஸ் சேவை இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.