மேல்மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை தவிர எனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் தரம் 01 இற்கு மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி குறித்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 11ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.