கடந்த 2020.12.31ம் திகதி இரவு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது. 4 ஆண்டுகள் இருபத்தேழு கிழமைகள் மற்றும் இரண்டு நாட்களுக்கு பின்னர் நாட்டினை பிளவுபடுத்திய வாக்கெடுப்புக்கு பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது.
பிரிட்டனின் இச்செயலானது பிரிட்டனை அரசியல் ரீதியாக பிரித்து நவீன காலங்களில் உலக அரங்கில் நாட்டின் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
