Surprising news with Update

Teaching Application

Saturday, January 2, 2021

கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer) இறக்குமதி, உற்பத்தி, விநியோகம், வியபாரம் தொடர்பில் பதிவு செய்தல் (NMRA)

கைச்சுத்திகரிப்பான்களின் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், விநியோகத்தர்கள் அல்லது வியாபாரிகள் தேசிய மருந்துகள் ஒழுங்கு முறைப்படுத்தும் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட கைச்சுத்திகரிப்பான்களை தவிர எனைய கைச்சுத்திகரிப்பான்களை இறக்குமதி செய்யவோ, உற்பத்தி செய்யவோ, 


களஞ்சியப்படுத்தவோ, விநியோகிக்கவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ, விற்பனைக்காக வெளிப்படுத்தவோ அல்லது விற்பனைக்கு கோரவோ மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்பனை செய்யவோ முடியாது எனவும் பதிவு இலக்கமானது கை சுத்திகரிப்பான் பொதியில் அல்லது கொள்கலனில் தெளிவாக விளங்கக் கூடிய இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிப்புரை, 2021 ஆம் ஆண்டு பெப்புருவரி மாதம் 01 ஆந் திகதியிலிருந்து அமுலுக்கு வருகின்றது.