Surprising news with Update

Teaching Application

Saturday, January 2, 2021

வெளிநாட்டில் தொழில் புரிவோர் தங்களது முறைப்பாடுகளை இணையம் மூலமாக அனுப்புவதற்கான வசதி

 

news.kuruwin

தற்பொழுது நாட்டில் காணப்படும் நோய்தொற்று நிலைமைகள் காரணமாக வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் முறைப்பாடுகளை இணையம் மூலமாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, வெளிநாடுகளில் தொழில் புரிகின்ற பணியாளர்கள் தங்களது உறவினர்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் தெரிவிக்க இருப்பின்  www.slbfe.lk என்ற இணையத் தளத்தின் ஊடாக  பணியாளர்கள் தங்களின் பயணச்சீட்டு இலக்கம், பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முறைப்பாடுகளை பதிவேற்ற முடியும். முறைப்பாடு தொடர்பான இலக்கமும் அந்தத் தருணத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.